தொழில்துறை அபிவிருத்திக்காக அரசாங்கம் நிதி ஒதுக்கவில்லை – பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் ரமேஷ் பத்திரன சுட்டிக்காட்டு!

Friday, March 31st, 2023

அரசாங்கம் நாட்டிற்கான இலவச கல்வி மற்றும் சுகாதார சேவைக்காக பெரும் தொகையை செலவிட்டுள்ளது.

ஆனால் கல்வித்துறையின் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்திக்காக அந்தளவு செலவு செய்யவில்லை என பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற ‘உணவு ஆராய்ச்சி விளக்கக்கூட்டம் மற்றும் வலையமைப்பு மன்றத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.

கைத்தொழில் துறையின் அபிவிருத்திக்காக அரசாங்கம் பணத்தைச் செலவிடவில்லை. “அரசாங்கம் பாதுகாப்புக்காக கிட்டத்தட்ட 350 பில்லியன் ரூபாவும் , கல்விக்காக 300 மில்லியன் ரூபாவும், சுகாதாரத்திற்காக 300 மில்லியன் ரூபாவையும், தொழில்துறை அபிவிருத்திக்காக 10 மில்லியன் ரூபாவையையும் செலவிட்டுள்ளது” என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

இதன்படி, அரசாங்கம் சுகாதாரம் மற்றும் கல்விக்காக நியாயமான தொகையை செலவழித்த போதிலும், நாட்டின் தொழில்துறை அபிவிருத்தியை கவனிக்கத் தவறிவிட்டது என்றும் சட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106