பொதுமக்களுக்கான சேவைகளை எவ்வித தடையும் இன்றி வழங்குவதற்கு இராணுவத்தினர் தயாராக இருக்கின்றார்கள் – இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோன் தெரிவிப்பு!

Thursday, March 30th, 2023

பொது மக்களுக்கு தேவையான சேவைகளை தொடர்ச்சியாக வழங்குவதற்காக அரசாங்கம் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கும் என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார்

மேலும் பொதுமக்களின் சேவைகளை சீர்குலைக்கும் செயற்பாடுகளில் ஈடுபடுவதை தவிர்க்குமாறு தொழிற்சங்கங்களிடம் வேண்டுகோள் விடுப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்காலத்தில் தொழிற்சங்க நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டால் அதன் போது குறித்த சேவைகளை வழங்குவதற்காக இராணுவத்தினரை ஈடுபடுத்துவதாகவும், பொதுமக்களுக்கான சேவைகளை எவ்வித தடையும் இன்றி வழங்குவதற்கு இராணுவத்தினர் தயாராக இருக்கின்றார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அதற்காக இராணுவத்தினருக்கு தேவையான பயிற்சிகளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்துள்ள இராஜாங்க அமைச்சர் மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை நடத்தி செல்வதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுப்பதற்கு அரசாங்கம் ஒருபோதும் பின்வாங்குவதில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106