பாடசாலை முதலாம் தவணை திங்களன்று ஆரம்பம் – தரம் ஒன்று மாணவர் சேர்க்கைக்கான ஏற்பாடுகளும் முன்னெடுப்பு கல்வி அமைச்சர் தெரிவிப்பு!
Sunday, March 26th, 2023
2022 ஆம் ஆண்டுக்கான மூன்றாம் தவணை கடந்த வெள்ளிக்கிழமையுடன் நிறைவடைந்ததாகவும் 2023 ஆம் ஆண்டுக்கான முதலாம் தவணை நாளை திங்கட்கிழமை ஆரம்பமாகவுள்ளதாகவும் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்..
2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில் 60 சதவீதத்துக்கு மேல் பாடசாலைக்கு மாணவர்கள் வர முடியாத காரணத்தால் இந்த வருடத்தில் அதிக விடுமுறை வழங்கவில்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.
பாடசாலைகளில் முதலாம் தவணை பொதுவாக ஜனவரியில் ஆரம்பிக்க வேண்டும் என்றும் கொரோனா காரணமாக தாமதமான கால அட்டவணையை தாங்கள் முன்னெடுத்துச் செல்வதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
திட்டமிட்டபடி பரீட்சைகளை நடத்தி முடித்ததாகத் தெரிவித்த அவர், 2022 ஆம் ஆண்டுக்கான தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சைக்கான வெட்டுப்புள்ளிகள் வெளியிடப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.
பெரும்பாலான பாடசாலைகள் செவ்வாய்க்கிழமை தரம் ஒன்று மாணவர் சேர்க்கைக்கான ஏற்பாடுகளையும் செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
000
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106