மார்ச் 30 முதல் அனைத்து தேசிய பாடசாலைகளிலும் பேச்சு ஆங்கிலம் கற்பிக்கப்படும் – கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த அறிவிப்பு!

Tuesday, March 21st, 2023

ஆங்கில மொழியின் விசேட மற்றும் முக்கியத்துவத்தை கருத்திற்க் கொண்டு, அனைத்து தேசிய பாடசாலைகளிலும் மார்ச் 30 முதல் தரம் ஒன்றிலிருந்து ‘ பேச்சு ஆங்கிலம்’ கற்பிக்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.

கொழும்பு பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய அமைச்சர் சுசில் பிரேமஜயந்த, 6-9 மற்றும் 10-13 வரையான அனைத்து பாடசாலை பாடத்திட்டங்களையும் சர்வதேச மட்டத்திற்கு கொண்டு வருவதற்கு தேவையான மேம்படுத்தல்கள் மேற்கொள்ளப்படும். இதற்கான முன்னோடித் திட்டம் அடுத்த மாதம் ஆரம்பிக்கப்படும் என்றுமு; தெரிவித்துள்ளார்..

மேலும் தகவல் தொழில்நுட்பத்துடன் செயற்கை நுண்ணறிவு பாடத்தையும் கற்பிக்க அமைச்சு திட்டமிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தேவையான பாட மேம்பாடு மற்றும் வள திட்டமிடல் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

2030 ஆம் ஆண்டளவில் கல்வித்துறை தொடர்பான உலகளாவிய நிலையான அபிவிருத்தி இலக்குகளை அடைவதற்கான சவாலை வெற்றிகொள்ள அமைச்சு செயற்பட்டு வருவதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106