உயர்தரத்தில் சித்தியடைந்தும் அரச பல்கலைக்கழகங்களில் அனுமதி பெற முடியாத மாணவர்களுக்கான கடன் உதவித் திட்டம் மீள ஆரம்பம்!
Monday, March 20th, 2023
உயர்தரத்தில் சித்தியடைந்தும் அரச பல்கலைக்கழகங்களில் அனுமதி பெற முடியாத மாணவர்களுக்கு 8 இலட்சம் ரூபாய் கடன் உதவி வழங்கும் திட்டத்தை மீண்டும் முன்னெடுக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
அத்தோடு மாணவர்களின் நாளாந்த செலவுக்காக மேலும் 3 இலட்சம் ரூபாய் வழங்கப்படவுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,
நாட்டில் கடன் வட்டி 25 வீதத்தை தாண்டியுள்ள நிலையில் வட்டியின்றி குறித்த கடனை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
அத்துடன் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரைக்கமைய 5,000 மாணவர்களுக்கு இந்த கடன் வசதி வழங்கப்படவுள்ளது.
தற்போது இலங்கை வங்கியினால் மாத்திரம் வழங்கப்படும் இந்த கடன் உதவி, எதிர்காலத்தில் மக்கள் வங்கி மற்றும் தேசிய சேமிப்பு வங்கியினாலும் வழங்கப்படும்.
எவ்வாறாயினும், இக்கடன் வழங்கலில் உயர்தர z புள்ளி எதிர்பார்க்கப்படும். அத்துடன் பாடநெறியின் காலத்துக்கு பொருத்தமான மதிப்பு போன்றனவும் கவனத்தில் கொள்ளப்படும் என தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106