கால்பந்து மைதானத்தில் தற்கொலை தாக்குதல்; 29 பேர் பலி! 60 பேர் காயம்!!

Saturday, March 26th, 2016

பாக்தாத்தில் உள்ள கால்பந்து மைதானத்தினுள் தற்கொலைப்படை தீவிரவாதி ஒருவர் வெடிகுண்டை வெடிக்க செய்ததில் 29 பேர் பலியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஈராக் தலைநகர் பாக்தாத் அருகே இஸ்காண்டிரியா என்ற நகரம் அமைந்துள்ளது.

இங்குள்ள கால்பந்து மைதானத்தில் நேற்று போட்டி நடைபெற்று கொண்டிருந்த போது தீவிரவாதி ஒருவர் தான் வைத்திருந்த வெடிகுண்டை வெடிக்க செய்தார்

இந்த குண்டு வெடிப்பில் சுமார் 29 பேர் பலியாகியுள்ளதாகவும் 60 பேர் காயமடைந்துள்ளதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

காயமடைந்தவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். இறந்தவர்கள் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.

மேலும் இந்த தாக்குதலுக்கு பொறுப்பெற்றுள்ள ஐ.எஸ்.அமைப்பு தாக்குதலில் ஈடுபட்ட இளம் ஜிகாதியின் புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளது.

முன்னதாக அன்பர் மாகாணத்தில் ஐ.எஸ். பிடியில் இருந்த நகரை ஈராக் படையினரும் சன்னி பழங்குடி போராளிகளும் மீட்டுள்ளதாக ராணுவ செய்தி தொடர்பாளர் யாஹ்யா ருஸொல் தெரிவித்திருந்தார்.

இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஐ.எஸ். அமைப்பினர் வெடிகுண்டு தாக்குதலை நிகழ்த்தியுள்ளதாக கூறப்படுகிறது

 



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106