உள்ளூராட்சி மன்றங்களின் அதிகார காலத்தை நீடிக்கலாம் – ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சுட்டிக்காட்டு!

Sunday, March 19th, 2023

உள்ளூராட்சி மன்றங்களின் அதிகார காலத்தை மேலும் நீடிப்பதற்கு விடயத்துக்கு பொறுப்பான அமைச்சருக்கு ஓர் ஏற்பாடை மேற்கொள்ள முடியுமென ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சுட்டிக்காட்டியுள்ளது.

வாக்களிப்புக்கு பணம் வழங்கக்கூடிய காலத்தை நிதி அமைச்சின் செயலாளர் அறிவித்தால் அதுவரை உள்ளூராட்சி மன்றங்களின் காலத்தை நீடிக்க அமைச்சருக்கு சட்ட ஏற்பாடுகள் உள்ளதாக அதன் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரத்தை ஆணையாளர்களின் கீழ் கொண்டு வருவதற்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன உடன்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

உள்ளூராட்சி நிறுவனங்களின் அதிகார காலத்தை நீடிக்குமாறு கடந்த வாரம் விடயத்துக்கு பொறுப்பான அமைச்சரான பிரதமர் தினேஷ் குணவர்தனவை அலரி மாளிகையில் சந்தித்து அறிவித்ததாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் சாகர காரியவசம் மேலும் தெரிவித்தார்.

எவ்வாறாயினும், தற்போதுள்ள சட்டத்தில் உள்ளூராட்சி மன்றங்களின் காலத்தை நீடிப்பதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை என பெஃபரல் (Paffarel) அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106