ஆசிரியர் இடமாற்றச் சபையை உடனடியாக கலைக்குமாறு ஜனாதிபதி உத்தரவு – இரத்தாகும் நிலையில் 12,500 ஆசிரிய இடமாற்றங்கள்!
Sunday, March 19th, 2023
கல்வி அமைச்சின் ஆசிரியர் இடமாற்றச் சபையை உடனடியாக இடைநிறுத்தி கலைக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விடுத்த உத்தரவின் காரணமாக சுமார் 12,500 ஆசிரியர்களின் இடமாற்றங்கள் அனைத்தும் இரத்துச் செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன
ஆசிரியர் இடமாற்றச் சபையின் பரிந்துரையின் பேரில் நடைமுறைப்படுத்தப்படவிருந்த இந்த ஆசிரியர்களின் இடமாற்றங்கள் இரத்துச் செய்யப்படுவதற்கு பல காரணிகள் செல்வாக்கு செலுத்தியதாகவும் அதே வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன.
போக்குவரத்துப் பிரச்சினைகள், அதிக செலவுகள் உள்ளிட்ட பல மனிதாபிமான பிரச்சினைகளின் அடிப்படையில் ஆசிரியர்களின் இடமாற்றத்தை தற்காலிகமாக ஒத்திவைக்குமாறும் அல்லது நிவாரணம் வழங்குமாறும் கோரி ஆசிரியர் தொழிலில் ஈடுபட்டுள்ள பலர் ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பியுள்ளதாகவும் அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106