யாழ் – கொழும்பு விமான சேவைகள் விரைவில் – யாழ். இந்திய துணைத் தூதர் தெரிவிப்பு!

Friday, March 17th, 2023

யாழ்ப்பாணம், பலாலி சர்வதேச விமான நிலையமூடாக யாழ். – கொழும்பு விமான சேவையை ஆரம்பிப்பது தொடர்பில், ஆராய்ந்து வருவதாக யாழ். இந்தியத் துணைத்தூதுவர் ராகேஷ் நட்ராஜ் ஜெயபாஸ்கரன் தெரிவித்துள்ளார்.

யாழ் – இந்தியத் துணைத்தூதரகம் மற்றும் வடமாகாண மகளிர் விவகார அமைச்சும் இணைந்து ஏற்பாடு செய்த சர்வதேச மகளிர் தின நிகழ்வுகள் யாழ். கலாசார மண்டபத்தில் நடைபெற்றது. இதில், கலந்து கொண்ட போதே, அவர் இதனைக் குறிப்பிட்டார்.

யாழ்ப்பாணம்,பலாலி சர்வதேச விமான நிலையத்திலிருந்து நடத்தப்படும் யாழ். – சென்னை விமான சேவையூடாக பலர் நன்மையடைந்து வருகின்றனர்.

இந்நிலையில், பலாலி சர்வதேச விமானம் நிலையத்திலிருந்து தென்னிந்தியாவின் ஏனைய நகரங்களுக்கும் சேவைகளை விஸ்தரிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

அதனடிப்படையில் யாழ்.- கொழும்பு விமான சேவை தொடர்பில், விரைவில் நல்ல செய்தி கிடைக்குமென்றும் என்றும் யாழ்ப்பாணத்துக்கான இந்தியத் துணைத்தூதுவர் ராகேஷ் நட்ராஜ் ஜெயபாஸ்கரன் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

000



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106