ஜனாதிபதி இணையத்தளத்தை ஊடுருவிய இருவருக்கும் பிணை!
Friday, September 2nd, 2016
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தை ஊடுருவிய குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த இருவரையும் பிணையில் விடுதலை செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குறித்த உத்தரவினை கொழும்பு பிரதம நீதவான் கிஹான் பிலபிட்டிய பிறப்பித்துள்ளார்.
இதனடிப்படையில் 17 வயது பாடசாலை மாணவனை 10 இலட்சம் பெறுமதியான சரீரப்பிணையில் விடுவித்த நீதவான், 27 வயது இளைஞனை 25 ஆயிரம் ரூபா ரொக்கப்பிணையிலும், 10 இலட்சம் பெறுமதியான நான்கு சரீரப்பிணையிலும் விடுதலை செய்யுமாறு உத்தரவிட்டார்.

Related posts:
ஜனாதிபதி கோட்டபயவின் தலைமையின் கீழ் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதில் இலங்கை சிறப்பாக செயற்பட்டுள்ளது...
இலங்கை போக்குவரத்து சபைக்கு 500 புதிய பேருந்துகளை கொள்வனவு செய்ய அனுமதி!
வறுமையில் வாடும் மக்களுக்காக 200 பில்லியன் நிதி - திறைசேரி அதிகாரிகள் தெரிவிப்பு!
|
|
|


