சமுர்த்தி உத்தியோகத்தர் பேர்வையில் பண மோசடி – அவதானமாக செயற்படுமாறு பொதுமக்களுக்கு பிரதேச செயலக அதிகாரிகள் அறிவுறுத்து!
Thursday, March 16th, 2023
சமுர்த்தி உத்தியோகத்தர் என கூறி பண மோசடியில் ஈடுபட்ட நபர் ஊர்காவற்துறை பிரதேச செயல பிரிவுக்குட்பட்ட பகுதியில் நடமாடுவதாகவும் மக்களை அவதானமாக செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது
சமுர்த்தி கொடுப்பனவு பெறும் முதியோருக்கு அரசினால் வழங்கப்படும் 20 ஆயிரம் ரூபா கொடுப்பனவினை பெறும் முதியவர்களை இலக்கு வைத்து ஒரு குழு பணமோசடியில் ஈடுபட்டு வருகின்றது
புதிதாக வந்த சமுர்த்தி உத்தியோகத்தர் என தம்மை அறிமுகப்படுத்தி 20,000 ரூபாய் தம்மிடம் தந்தால் மாதாந்தம் ஒரு தொகை கொடுப்பனவு வழங்குவோம் என கூறி முதியவர்களிடம் பணம் பறித்து செல்லும் சம்பவங்கள் உடுவில் கோப்பாய், வேலணை பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் அண்மை நாள்களில் இடம் பெற்றிருந்தது.
குறிப்பாக நேற்றையதினம் வேலணை பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட பகுதியிலும் மேற்படி சம்பவம் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது
நிலையில்குறித்த சந்தேக நபர் இன்றையதினம் ஊர்காவற் துறை பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட சரவணை பகுதியில் NP HZ 3125 மோட்டார் சைக்கிளில் நபரின் நடமாட்டம் அவதானிக்கப்பட்டுள்ளதாகவும் எனவே குறித்த நபர் தொடர்பில் பாதுகாப்பு தரப்பினருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதோடு குறித்த நபரை கைது செய்வதற்குரிய நடவடிக்கையினை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர்
எனவே பொதுமக்கள் குறித்த விடயம் தொடர்பில் அவதானமாக இருக்குமாறு ஊர்காவற்துறை பிரதேச செயலக அதிகாரிகள் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
000
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106