யாழ்ப்பாண கலாசார மண்டபத்தில் நடைபெற்ற 2023 ஆம் ஆண்டுக்கான உலக மகளிர் தின நிகழ்வுகள்!

Wednesday, March 15th, 2023

யாழ் இந்தியத் துணைத்தூதரகம் மற்றும் வடக்குமாகாண மகளிர் விவகார அமைச்சும் இணைந்து ஏற்பாடு செய்த சர்வேத மகளிர் தின நிகழ்வுகள் இன்று நடைபெற்றது

யாழ்ப்பாண கலாசார மண்டபத்தில் இன்று காலை 9 மணியளவில் குறித்த நிகழ்வுகள் ஆரம்பமாகின.

பால்நிலை சமத்துவத்திற்கான புதுமை தொழில்நுட்பம் எனும் கருப் பொருளில் 2023ஆம் ஆண்டுக்கான மகளீர் தினம் இடம்பெற்றது. இதன்போது பல்வேறு துறைகளைச் சேர்ந்த பெண்களுக்கு விருதுகள் வழங்கப்படன.

இவ் நிகழ்வில், இந்திய துணைத்தூதவர் ராகேஷ் நடராஜ் ஜெயபாஸ்கரன், யாழ்மாவட்ட அரசாங்க அதிபர் அ.சிவபாலசுந்தரன், பொலிஸ் மற்றும் இராணுவ அதிகாரிகள், மாவட்ட செயலாளர்கள், திணைக்கள உத்தியோகத்தர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

இதனிடையே யாழ்ப்பான கலாசார மண்டப முன்றலில் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு வடக்கு மாகாண மகளிர் விவகார அமைச்சு மற்றும் வடக்கு மாகாண தொழிற்துறைத் திணைக்களமும் இணைந்து நடத்திய மகளிர் உற்பத்திப் பொருட்களின் கண்காட்சியும் விற்பனையும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது

000



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106