பல இலட்சம் பெறுமதியான முதிரைக் குற்றிகளுடன் ஒருவர் கைது !
Friday, September 2nd, 2016
கிளிநொச்சி பளைப் பிரதேசத்தில் வைத்து சுமார் பதினைந்து இலட்சம் ரூபா பெறுமதியான முதிரைக் குற்றிகளுடன் ஒருவரை பளைப் பொலிசார் கைதுசெய்துள்ளனர். நேற்று காலை எட்டு மணியளவில் பளைப் பொலிசாருக்கு கிடைத்த இரசியத்தகவலை அடுத்து மன்னாரில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு பாரஊர்தி ஒன்றில் எருவினைக் கொண்டுசெல்வதனைப்போல் கடத்தப்பட்ட சுமார்பதினைந்து இலட்சம் ரூபா பெறுமதியான 39 முத்திரைக் குற்றிகளுடன் வாகனச் சாரதியினையும் இத்தாவில் பகுதியில் வைத்துக் கைது செய்துசெய்யப்பட்டுள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளைப் பளைப் பொலிசார் மேற்கொண்டு வருவதுடன் இன்று குறித்த சந்தேகநபரை கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் முன்னிலைப் படுத்த இருப்பதாக வும் செய்திக்ள் தெரிவிக்கின்றன.

Related posts:
யாழ்ப்பாணத்தில் பலாப்பழத்துக்கு குறைந்தது மவுசு!
எரிபொருள் விலை சூத்திரம் குறித்து இறுதி முடிவு எடுக்கப்படவில்லை - நிதியமைச்சு!
சாதாரண தர பரீட்சை மாணவர்களுக்கு பரீட்சைகள் திணைக்களம் விடுத்துள்ள செய்தி!
|
|
|


