நெருக்கடியான சூழலில் நட்பு நாடுகள் உதவ வந்திருப்பது நாட்டின் அதிர்ஷ்டம் – அமைச்சர் அலி சப்ரி தெரிவிப்பு!

Friday, March 10th, 2023

நாடு மிகவும் நெருக்கடியான தருணத்திலுள்ளபோது அக்கறையுடன் உதவும் நட்புநாடுகள் கிடைத்திருப்பது. இலங்கையின் அதிர்ஷ்டமெனக் குறிப்பிட்ட வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, தற்போதைய சூழ்நிலையில் அவசியமான அனைத்து உத்தரவாதங்களுடனும் முன்னோக்கிப் பயணிப்பது சிறந்ததென்றும் தெரிவித்துள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்தின் 2.9 பில்லியன் கடனுதவியை இலங்கை பெற்றுக்கொள்வதற்கான நிதியியல் உத்தரவாதத்தை முதலாவதாக  இந்தியாவும், அதனைத்தொடர்ந்து பாரிஸ் கிளப் உறுப்புநாடுகளும் வழங்கியிருந்தன.

இருப்பினும் இலங்கையின் மிகப் பாரியளவிலான இருதரப்புக் கடன்வழங்குனரான சீனா, உரியவாறான உத்தரவாதத்தை வழங்குவதில் தொடர்ந்தும் தாமதம் காட்டியது.

இவ்வாறானதொரு பின்னணியில் கடந்த வாரம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருந்துவெளியிட்ட சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் மாவோ நிங், சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை இலங்கை பெற்றுக்கொள்வதற்கு அவசியமான முழுமையான ஒத்துழைப்பை வழங்கத்தயாராக இருப்பதாக உத்தரவாதமளித்திருந்தார்.

கடந்த (07) செவ்வாய்கிழமை தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் (07) பக்கத்தில் பதிவையிட்டிருக்கும் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, ‘தற்போதைய கடினமான சூழ்நிலையில் அக்கறையுடன் உதவக்கூடிய நட்புநாடுகள் கிடைத்திருப்பது இலங்கையின் அதிஷ்டமாகும்.

அவசியமான சகல உத்தரவாதங்களும் கிடைத்துள்ளதால், அடுத்த கட்டத்தை நோக்கிப் பயணிக்கத் தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

000



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106