பாரிய நில அதிர்வின் எதிரொலி – அச்சத்தில் வீடுகளுக்கு வெளியே வாழும் துருக்கி – சிரியா மக்கள்!
Tuesday, March 7th, 2023
அண்மையில் துருக்கி மற்றும் சிரியா ஆகிய நாடுகளில் ஏற்பட்ட பாரிய நில அதிர்வில் இருந்து தப்பியவர்கள் தொடர்ந்தும் அச்ச நிலையில் தமது வீடுகளுக்கு வெளியே வாழ்ந்து வருகின்றனர்
பாரிய நில அதிர்வினை அடுத்து அந்த இரு நாடுகளிலும் தொடர்ச்சியாக சிறிய அளவிலான நில அதிர்வுகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
துருக்கியில் மட்டும் 45,968 பேரும் சிரியாவில் 6,000க்கும் மேற்பட்டவர்கள் பலியாகியுள்ளதாக அரசாங்கங்கள் விடுத்துள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
பெரும்பாலான வீடுகள் சேதமடைந்துள்ள நிலையில், 15 இலட்சத்திற்கும் மேற்பட்ட வீடுகள் முற்றாக அழிந்து போய் உள்ளன.
நில அதிர்வு மேலும் ஏற்படலாம் என அறிவிக்கப்பட்ட பிரதேசங்களில் உள்ள மக்களில் 20 இலட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் இடம்பெயர்ந்துள்ளனர்.
இந்தநிலையில், பூமி அதிர்வு ஏற்படலாம் என உறுதிப்படுத்தப்பட்ட இடங்களில் 15 இலட்சம் மக்கள் தொடர்ந்தும் வசித்து வருவதாக ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி திட்டம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106