கோப் குழுவில் முன்னிலையாகுமாறு பல அரச நிறுவனங்களுக்கு அழைப்பு!
Monday, March 6th, 2023
கோப் எனப்படும் அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவில் இந்த வாரம் முன்னிலையாகுமாறு பல அரச நிறுவனங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி, நாளையதினம் மத்திய கலாசார நிதியம் மற்றும் இலங்கை ஏற்றுமதி கடன் காப்புறுதி கூட்டுத்தாபன அதிகாரிகள் அழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன், நாளைமறுதினம் இலங்கை காப்புறுதி கூட்டுத்தாபனமும், எதிர்வரும் 9 ஆம் திகதி மறுசீரமைப்பு ஆணைக்குழுவும் கோப் குழுவுக்கு அழைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
சண்டிலிப்பாயில் இளைஞன் மீது கத்தி வெட்டு!
கொரோனா அச்சுறுத்தல்: பாடசாலை அதிபர்களுக்கு அமைச்சு வழங்கியுள்ள ஆலோசனை!
பொலிஸ் அதிகாரம் தொடர்பில் தற்போது பேச முடியாது.- பேசினால் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியாது - தமி...
|
|
|


