பொருளாதார நெருக்கடியை தீர்ப்பதில் எதிர்க்கட்சி அர்ப்பணிப்பை காட்டவில்லை – எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க சுட்டிக்காட்டு!
Monday, March 6th, 2023
தற்போதைய பொருளாதார நெருக்கடியை தீர்ப்பதில் எதிர்க்கட்சி எந்த ஒரு அர்ப்பணிப்பையும் காட்டவில்லை என எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
ஒரு அரசியல் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் தலைவர் ஒருவர், தமது ஆங்கில மொழித் திறமையின் மூலம் சர்வதேச சமூகத்தை நம்ப வைக்க முடியும் என்று நினைக்கிறார்.
மற்றொருவர் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் சலுகைகளை விடுத்து சர்வதேச சமூகத்தை நம்ப வைப்பதாக கூறுகிறார்.
சிக்கலான பிரச்சினைகளுக்கு பதிலளிக்கும் வகையில் கருத்துக்கள் வெளியிடப்படுகின்றன என நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் பொது நிகழ்வொன்றில் தெரிவிக்கிறார்.
இந்தநிலையில், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் இருந்து அதிகாரத்தை கைப்பற்றினால் தேசத்தை நடத்த முடியும் என ஒருவர் நினைத்தால் அது தவறாகும் என நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
000
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106