நாட்டில் எந்தத் தேர்தல் முதலில் நடக்கும் என ஊகிக்க முடியவில்லை – முன்னாள் அமைச்சர் பஷில் ராஜபக்ஷ தெரிவிப்பு!
Sunday, March 5th, 2023
நாட்டில் எந்தத் தேர்தல் முதலில் நடக்கும் என்பதனை தங்களால் ஊகிக்க முடியவில்லை என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் முன்னாள் அமைச்சருமான பஷில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
எந்தத் தேர்தல் நடந்தாலும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவே வெற்றியடையும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எந்தத் தேர்தலிலும் தோற்ற வரலாறு மொட்டுக் கட்சிக்கு இல்லை எனவும் அவர் கூறியுள்ளார்.
அத்துடன், உள்ளூராட்சி சபைத் தேர்தலையும் தொடர்ந்து பிற்போட முடியாது எனவும், மக்களின் ஜனநாயக உரிமை நிலைநாட்டப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த வருடமும் அடுத்த வருடமும் தேர்தல்களுக்கான வருடங்கள் எனவும் பஷில் ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.
இதேநேரம் உள்ளூராட்சி சபைத் தேர்தல் ஊடாக ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த முடியாது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கூறியது போல் நாடாளுமன்றத் தேர்தல் மூலம் மாத்திரம்தான் அரசாங்கத்தினை மாற்ற முடியும் எனவும் பஷில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106