பாலைதீவுக்கு அமைச்சர் டக்ளஸ் கண்காணிப்பு விஜயம் – பாலைதீவு அந்தோனியார் ஆலயத்தின் புனரமைப்பு மற்றும் திருவிழா கால செலவீனங்களுக்கும் ஏற்பாடு!
Sunday, March 5th, 2023
பூநகரி, பாலைதீவிற்கான கண்காணிப்பு விஜயம் ஒன்று இன்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் மேற்கொள்ளப்பட்டது.
பள்ளிக்குடா பிரதேசத்தினை சேர்ந்த பாலைதீவு பகுதியில் நீர்வேளாண்மை உற்பத்திகளுக்கு பொருத்தமான இடங்கள் விஞ்ஞான ரீதியாக அடையாளப்படுத்தப்பட்டுள்ள நிலையில் குறித்த பகுதிக்கான கள விஜயத்தினை அதிகாரிகள் சகிதம் கடற்றொழில் அமைச்சர் மேற்கொண்டார்.
கடற்றொழில்சார் மக்களுக்கான வாழ்வாதாரத்தினை அதிகரிக்கும் வகையில் குறித்த பகுதியில் பல்வேறு திட்டங்களை மேற்கொள்வதற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா எதிர்பார்த்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் பாலைதீவு அந்தோனியார் ஆலயத்தின் வழிபாடுகளில் ஈடுபட்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, ஆலயத்தின் செயற்பாடுகள் தொடர்பாக நிர்வாகிகளுடன் கலந்துரையாடியதுடன், ஆலயத்தின் புனரமைப்பு பணிகளுக்காக நிதியுதவி வழங்குவதற்கும் உறுதியளித்திருந்தார்.
இதேவேளை நீர்வேளாண்மை உற்பத்திகளான கடலட்டை வளர்ப்பு மற்றும் கடல்பாசி வளர்ப்பு போன்ற நீர்வேளாண்மை உற்பத்திகளை பாலைதீவை அண்டிய பகுதிகளில் ஆய்வு ரீதியாக அடையளப்படுத்தப்பட்ட இடங்களில் தனியார் முதலீட்டாளர்களின் ஒத்துழைப்புடனும், பாலைதீவை அண்டிய பிரதேச மக்களின் பங்களிப்புடனும் மேற்கொள்வது தொடர்பாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சம்மந்தப்பட்ட தரப்புக்களுடன் கலந்துரையாடினார்.
கடற்றொழிலாளர்களுக்கு மேலதிக வாழ்வாதாரத்தினை வழங்கக் கூடிய குறித்த உற்பத்திகளை மேற்கொள்கின்ற தரப்புக்கள் பிரதேசத்தின் வளர்சசிக்கு வருமானத்தில் ஒரு பகுதியை வழங்க வேண்டும் என்று தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, பாலைதீவு அந்தோனியார் ஆலயத்தின் புனரமைப்பு மற்றும் திருவிழா கால செலவீனங்களுக்கும் பங்களிப்பு செய்ய வேண்டும் எனவும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
00
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106