இந்தோனேசியாவின் எரிபொருள் சேமிப்புக் கிடங்கில் பாரிய தீ விபத்து – 17 பேர் பலி – 50க்கும் அதிகமானோர் படுகாயம்!

Saturday, March 4th, 2023

இந்தோனேசியாவில் எரிபொருள் சேமிப்பு கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் 17 பேர் உயிரிழந்தனர்.  50க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

இந்தோனேசியாவின் தெற்கு பபுவா மாகாணம் தனஹ்மெர்கா என்ற பகுதியில் அரசுக்குச் சொந்தமான மிகப்பெரிய எரிபொருள் சேமிப்பு கிடங்கு உள்ளது

இந்தோனேசியாவின் ஒட்டுமொத்த எரிபொருள் தேவையில் 25 சதவீதம் இங்கிருந்து தான் விநியோகிக்கப்படுகிறது.

இந்நிலையில், இந்த சேமிப்புக் கிடங்கில் நேற்று பாரிய தீ விபத்து ஏற்பட்டது. இந்தக் கோர தீ விபத்தில் சேமிப்புக் கிடங்கில் இருந்த எரிபொருள் தீப்பற்றி எரிந்தது. இந்த விபத்தில் 17 பேர் உயிரிழந்தனர். மேலும், 50க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

தகவலறிந்து 52 வாகனங்களில் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற 250க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

கன மழை காரணமாக எரிபொருள் கொண்டு செல்லும் குழாயில் உடைப்பு ஏற்பட்டு அதில் மின்னல் தாக்கியதில் தீ பிடித்திருக்கலாம் என்று முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. தீயணைப்பு, மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

000



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106