குளங்களை புனரமைக்க 300 மில்லியன் ரூபா ஒதுக்கீடு – விவசாய அபிவிருத்தி திணைக்களம் அறிவிப்பு!

Friday, March 3rd, 2023

பல தசாப்தங்களாக புனரமைக்கப்படாமல் கைவிடப்பட்ட 30 குளங்களை இந்த வருடத்திற்குள் புனரமைக்க விவசாய அபிவிருத்தி திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இதற்காக 300 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் விவசாய அபிவிருத்தி திணைக்களம் அறிவித்துள்ளது.

இதற்கமைய ஹம்பாந்தோட்டை, வவுனியா, முல்லைத்தீவு, மன்னார், மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை, அனுராதபுரம், குருநாகல், புத்தளம், பதுளை, மொனராகலை ஆகிய மாவட்டங்களில் இருந்து தெரிவு செய்யப்பட்ட 30 கைவிடப்பட்ட குளங்கள் புனரமைக்கப்படவுள்ளன.

இந்தக் குளங்களின் கீழ் நெல் பயிரிடுவதற்குப் பதிலாக மரக்கறிகள் மற்றும் பழங்கள் பயிரிடுவதற்கு முன்னுரிமை வழங்குமாறு விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர, விவசாய அபிவிருத்தி திணைக்களத்திற்கு பணிப்புரை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106