இலங்கைக்கு ஆதரவளிப்பதாக சீனா மீண்டும் உறுதியளிப்பு!

Thursday, March 2nd, 2023

 

சர்வதேச நாணய நிதியத்திற்கான இலங்கையின் கடன் விண்ணப்பத்திற்கு சீனாவின் ஏற்றுமதி இறக்குமதி வங்கி ஆதரவளிப்பதாக உறுதியளித்துள்ளதாக சீனா மீண்டும் வலியுறுத்தியுள்ளது.

இது தொடர்பான ஆவணங்களை சீனாவின் ஏற்றுமதி இறக்குமதி வங்கி நிதியமைச்சகத்திடம் கையளித்துள்ளதாக சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் மாவோ நிங் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் குறுகிய கால கடன் வசதிகளை செலுத்துவதற்கு இரண்டு வருடங்கள் வழங்கப்படும் என ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கையின் கடன் மறுசீரமைப்பு தொடர்பான விசாரணைக்கு பதிலளித்த சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் மாவோ நிங், சர்வதேச இறையாண்மை பத்திரம் வைத்திருப்பவர்கள் மற்றும் பலதரப்பு கடன் வழங்குநர்கள் உட்பட வர்த்தக கடன் வழங்குநர்கள் இலங்கைக்கு அதிகபட்ச பங்களிப்புகளை வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்படுவார்கள்.

இலங்கையின் கடன் மறுசீரமைப்பு செயல்முறைக்கு சீனா தொடர்ந்து ஆதரவளிக்கும் என்றும், இலங்கையின் கடன் சுமையை குறைப்பதற்கும் நிலையான அபிவிருத்தியை அடைவதற்கும் சாதகமான பங்கை வகிக்க சர்வதேச நிதி நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்றும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

000



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106