முன்னாள் ஜனாதிபதி மைத்ரியின் மேன்முறையீட்டு மனு கட்டணத்துக்கு உட்பட்டு நிராகரிப்பு!

Wednesday, March 1st, 2023

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தாக்கல் செய்த மேன்முறையீட்டு மனுவை 21,000 ரூபா கட்டணத்துக்கு உட்பட்டு நிராகரிக்குமாறு மேல் மாகாண குடியியில் மேன்முறையீட்டு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சஞ்சீவ மொரேஸ் மற்றும் பிராங்க் குணவர்தன ஆகிய நீதிபதிகள் குழாம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

ஏப்ரல் 21 தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்கக்கோரி தமக்கு எதிராக கொழும்பு மாவட்ட நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அனைத்து வழக்குகளையும் நிராகரித்து அந்த வழக்குகளில் இருந்து தன்னை விடுவித்து உத்தரவு பிறப்பிக்குமாறு கோரி மைத்திரிபால சிறிசேன இந்த மேன்முறையீடை தாக்கல் செய்திருந்தார்.

ஏப்ரல் 21 பயங்கரவாதத் தாக்குதலைத் தடுக்க போதிய புலனாய்வு தகவல் கிடைத்தும் நடவடிக்கை எடுக்க தவறியமைக்காக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உள்ளிட்டோருக்கு எதிராக பாதிக்கப்பட்டவர்கள் கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் 108 வழக்குகளைத் தாக்கல் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(812): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(745): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106