இலங்கையின் கடன் விவகாரம் – சரியான நேரத்தில் ஒழுங்கான நடைமுறை அவசியம் – சர்வதேச நாணய நிதியம் அழைப்பு!

Monday, February 27th, 2023

இலங்கையின் கடன் தொடர்பில், பொதுவான கட்டமைப்பின் கீழ் உரிய நேரத்தில் ஒழுங்கான செயல்முறைகளுக்கு, சர்வதேச நாணய நிதியம் அழைப்பு விடுத்துள்ளது.

இந்தியாவின் பெங்களூரில் நேற்றுமுன்தினம் நிறைவடைந்த ஜி20 நிதி அமைச்சர்கள் மற்றும் மத்திய வங்கி ஆளுநர்கள் கூட்டத்தின் இறுதியில், இது தொடர்பான அறிக்கையை சர்வதேச நாணய நிதியத்தின் முகாமை பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜொர்ஜீவா வெளியிட்டார்.

கடன் கட்டமைப்பை வலுப்படுத்தவும், கடனைத் தீர்க்கும் வேகம் மற்றும் செயல்திறனை மேம்படுத்தவும் முயற்சிகள் மேற்கொள்ளப்படவேண்டுமென்று அவர் தமது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

பல நாடுகளில், கொரோனா தொற்றுநோய்க்கு முன்னரே கடன் பாதிப்புக்கள், உயர்ந்த நிலையில் இருந்தன. இறையாண்மைக் கடன் பாதிப்புகள், கொரோனா மற்றும் உக்ரைனுக்கு எதிரான ரஷ்யாவின் போரின் எதிரொலிகளால், இந் நிலைமைகள் மோசமடைந்துள்ள தாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே, உலகளாவிய குடும்பத்தின் மிகவும் பாதிக்கப்படக்கூடிய உறுப்பினர்களுக்கான தீர்வுகளைக் கண்டறிய, சர்வதேச சமூகம் ஒன்றுபட வேண்டிய பொறுப்புள்ளதென்றும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106