பிரபாகரனுக்குப் பின்னர் நாட்டிற்கு மிகப்பெரிய அழிவை ஜேவிபி செய்தது – திஹாகொட பத்திய தேரர் சுட்டிக்காட்டு!

Saturday, February 25th, 2023

பிரபாகரனுக்குப் பின்னர் நாட்டிற்கு மிகப்பெரிய அழிவை மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) செய்துள்ளதாக மேல் மாகாண அதிகார சங்கநாயக்க வண.திஹாகொட பத்திய தேரர் தெரிவித்துள்ளார்.

கடந்த காலங்களில் ஜே.வி.பி நாட்டிற்கு செய்த அழிவுகளை மக்கள் மறக்கவில்லை என்றும்,மக்கள் விடுதலை முன்னணி என்ற பெயரில் தோன்றினாலும், இன்னமும் அதே கொடிய கட்சி தான் என்றும் தேரர் குறிப்பிட்டுள்ளார்.

மக்கள் விடுதலை முன்னணியின் பௌத்த விவகாரங்களின் தலைவராக நியமிக்கப்பட்ட தனவர்தன குருகேவுடன் அஸ்கிரிய மற்றும் மல்வத்தை பீடங்களின் மகாநாயக்க தேரர்களை சந்தித்து ஆசி பெற்றதன் பின்னர் ஊடகவியலாளர்கள் முன்னிலையில் கருத்து தெரிவிக்கும் போதே தேரர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

கடந்த காலத்தை அறியாத இளைஞர்கள் மக்கள் விடுதலை முன்னணியை சுற்றித் திரண்டு வருகின்றனர் .

தலதா மாளிகை மீதான தாக்குதல், பிக்குகள் படுகொலை, அரச சொத்துக்கள் அழிக்கப்பட்டமை போன்ற பல அழிவுச் செயல்களுக்கு ஜே.வி.பி பொறுப்பேற்றது என்பது அனைவரும் அறிந்த உண்மை.

மேலும், அவர்கள் செய்த குற்றங்களை ஏற்றுக்கொள்ளாத ஒரு குழுவிடம் நாட்டின் ஆட்சி சென்றால், ஏற்படும் சூழ்நிலையை எவரும் கற்பனை செய்து பார்க்க முடியும் என்றும் தேரர் தெரிவித்துள்ளார்.

000



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106