ஊடகங்கள் கண்காணிப்பு சட்டம் தயாரிப்பு முதற்கட்டம் ஆரம்பம் – அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவிப்பு!
Friday, February 24th, 2023
ஊடகங்கள் கண்காணிப்பு சட்டத்தை தயாரிப்பதற்கான ஆரம்பக்கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ள தாக, ஊடகத்துறை மற்றும் போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
அந்த வகையில் செய்திகளை வெளியிடுதல் தொடர்பில் ஊடக நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் பத்திரிகை ஆசிரியர்களை அழைத்து விசேட பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்குமாறும் அமைச்சர் பந்துல குணவர்த்தன சபாநாயகரிடம் கேட்டுக்கொண்டார்.
ஊடகங்கள், சமூக வலைத்தளங்களில் வெளியாகும் பொய்யான செய்திகளால், அரசியல் வாதிகளின் உடமைகள், உயிர்களுக்கு அச்சுறுத்தல்கள் ஏற்படுவதை ஏற்றுக் கொள்வதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
இதைக் கருத்திற்கொண்டுதான், ஊடக கண்காணிப்பு சட்டத்தை உருவாக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் சபையில் உரையாற்றிய அமைச்சர் தெரிவித்தார்.
ஊடகக் கலாசாரம் முறையாக பேணப்பட வேண்டுமாயின் ஊடகங்களையும், சமூக வலைத் தளங்களையும் கண்காணிக்கும் வகையில் சட்டம் உருவாக்கப்பட வேண்டுமென ஆளும் தரப்பினர், இதன்போது சபாநாயகரை வலியுறுத்தினர். இதற்குப் பதிலளிக்கும் வகையிலேயே அமைச்சர் பந்துல குணவர்த்தன இவ்வாறு தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106