40 புதிய பேருந்துகள் சேவையில் – நெடுஞ்சாலைகள் அமைச்சு தெரிவிப்பு!
Wednesday, February 22nd, 2023
இந்திய கடன் திட்டத்தின் கீழ் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ள 40 பேருந்துகளை தேசிய போக்குவரத்து சேவையில் இணைத்துக்கொள்ளவுள்ளதாக போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்திய கடன் திட்டத்தில் 165 பேருந்துகள் இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ளன. குறித்த பேருந்துளில் 40 பேருந்துகள் இவ்வாறு பொது போக்குவரத்து சேவையில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளன.
அத்துடன், கிராபுரங்களில் நிலவும் குறைப்பாடுகளை நிவர்த்தி செய்வதற்கு இந்த வருடத்திற்குள் 500 பேருந்துகள் சேவையில் ஈடுபடுத்தவுள்ளதாகவும் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சு அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
அமெரிக்கக் கப்பல் இலங்கை வருகை பயணம்
கூட்டுறவுச் சங்கங்களை கண்காணிக்கும் நடவடிக்கையில் வடக்கு கூ. அபி. திணைக்களம்!
நாகப்பட்டினம் – காங்கேசன்துறை பயணிகள் கப்பல் சேவை வாரத்தில் 3 நாட்களுக்கு மட்டுப்படுத்தப்படது!
|
|
|


