சீனாவின் எக்ஸிம் வங்கி இலங்கைக்கு கடன் நீடிப்பை வழங்கியுள்ளது – னாவின் வெளிவிவகார அமைச்சு அறிவிப்பு!

Tuesday, February 21st, 2023

இலங்கையின் கடன் நிலைத்தன்மையை மேம்படுத்துவதற்கு உதவும் வகையில் சீனாவின் எக்ஸிம் வங்கி இலங்கைக்கு கடன் நீடிப்பை வழங்கியுள்ளது என சீனாவின் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

சீனாவின் உத்தரவாதம் இல்லாமல், இலங்கைக்கு உதவுவது குறித்து சர்வதேச நாணய நிதியம் பரிசீலித்து வருவதாக கடந்த வாரம் ப்ளூம்பெர்க் தெரிவித்ததை அடுத்து இந்த கருத்துக்கள் வந்துள்ளன.

இந்நிலையில் 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில் நிலுவையில் உள்ள கடனை நீடிக்க தாம் விருப்பம் தெரிவித்துள்ளதாக சீனாவின் வெளிவிவகார அமைச்சு நேற்று தெரிவித்துள்ளது.

மேலும் இலங்கையின் கடன் நிலைத்தன்மையை ஆதரிக்கும் கடிதத்தை சீனா ஏற்கனவே வழங்கியுள்ளது என்றும் வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் வாங் வென்பின் தெரிவித்துள்ளார்.

இந்த காலகட்டத்தில், இலங்கை பெற்றுக்கொண்ட கடனை திருப்பிச் செலுத்த வேண்டியதில்லை என்றும் இது குறுகிய கால கடன் அழுத்தத்தை குறைக்க இலங்கைக்கு உதவும் என்றும் கூறியுள்ளார்.

இதேவேளை இலங்கையுடன் ஒரு நடுத்தர மற்றும் நீண்ட கால கடனை அகற்றும் திட்டம் குறித்து நட்புரீதியில் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106