உள்ளுராட்சி மன்ற தேர்தல் தொடர்பில் 23 ஆம் திகதிக்கு பின்னர் இறுதி செய்யப்படும் – தேர்தல்கள் ஆணைக்குழு அறிவிப்பு!
Saturday, February 18th, 2023
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான மேலதிக தீர்மானங்கள் எதிர்வரும் 23 ஆம் திகதிக்கு பின்னர் மேற்கொள்ளப்படும் என்று தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்கு பணம் வழங்குவதில் உள்ள தடை தொடர்பில் திறைசேரி செயலாளர் மஹிந்த சிறிவர்தன தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அறிவித்துள்ளதாக அதன் தலைவர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.
இதன்படி, தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் நிதி வழங்குவதில் உள்ள சிரமங்கள் மற்றும் அத்தியாவசிய சேவைகளுக்கு மாத்திரம் நிதியை ஒதுக்க அரசாங்கம் எடுத்த நிர்வாக தீர்மானம் குறித்து திறைசேரி செயலாளர் தேர்தல் ஆணையத்திக்கு அறிவித்திருந்தார்.
இதேவேளை, எதிர்வரும் 22, 23, 24 மற்றும் 28ஆம் திகதிகளில் நடைபெறவிருந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் அஞ்சல் மூல வாக்களிப்பு நடவடிக்கைகள் மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தப்பட்டுள்ளன.
தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு இணக்கம் தெரிவிக்கப்பட்ட திகதிகளில் அஞ்சல் மூல வாக்குகளை ஆணைக்குழுவிற்கு வழங்காத காரணத்தினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதேவேளை, திறைசேரிக்கு நிதி வழங்க முடியாவிட்டால் உள்ளூராட்சி தேர்தலுக்கு தேவையான வாக்குச்சீட்டுகளை அச்சிட முடியாது என அரச அச்சக அதிபர் கங்கானி லியனகே தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106