புறப்பட்டு 3 மணித்தியாலங்களில் மீண்டும் கட்டுநாயக்கா திரும்பிய விமானம்!
Thursday, September 1st, 2016
இலண்டன் சென்ற ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானம் ஒன்று தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, மீண்டும் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு திரும்பியதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த பயணிகள் அன்றைய தினம் மாலை மற்றுமொரு விமானத்தின் மூலம் பயணத்தை தொடர்ந்ததாக ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் பேச்சாளர் டீபால் பெரேரா தெரிவித்துள்ளார். கடந்த திங்கட்கிழமை 1.30 மணியளவில் பயணத்தை ஆரம்பித்த விமானம் 3 மணித்தியாலங்களின் பின்னர் மீண்டும் நாடு திரும்பியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதனை தொடர்ந்து மேலும் ஒரு மணித்தியாலங்களின் பின்னர் மற்றைய விமானம் தனது பயணத்தை ஆரம்பித்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
Related posts:
வடக்கு கிழக்கில் வெப்பநிலை அதிகரிக்கும்!
நியமனத்தில் புறக்கணிக்கப்பட்ட வடக்கு மாகாண சுகாதார தொண்டர்கள் வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகம் முன்பாக ப...
தீர்வுகள் கிடைப்பது சாத்தியப்படுமா என்பதை விட அதனை சாத்தியப்படுத்த வேண்டியவர்களாக இருப்பதே முக்கியமா...
|
|
|


