தபால் மூலம் வாக்களிக்க 6 இலட்சத்து 76 ஆயிரம் பேர் தகுதி – தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவிப்பு!
Saturday, February 11th, 2023
உள்ளூராட்சித் தேர்தலில் தபால் மூலம் வாக்களிக்க ஆறு இலட்சத்து 76 ஆயிரத்து 873 பேர் தகுதி பெற்றுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
குருநாகல் மாவட்டத்தில் அதிகளவாக 75 ஆயிரத்து 579 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் குறைந்தளவான தபால்மூல வாக்காளர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அந்த எண்ணிக்கை மூவாயிரத்து 187 எனவும் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
தபால் மூலம் வாக்களிப்பதற்காக விண்ணப்பித்த 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரச ஊழியர்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
உள்ளூராட்சித் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு எதிர்வரும் 22, 23 மற்றும் 24ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
ஜனாதிபதி தேர்தல்: வேட்புமனுவில் கையொப்பமிட்டார் கோத்தபாய!
இலங்கையில் நிலக்கண்ணி வெடிகளை அகற்ற கனடா நிதி உதவி!
வீதியில் நிற்பவர்களை சந்திப்பதற்கு தயாரில்லை - யாழ் மாநகரின் முதல்வர்!
|
|
|


