தோழர் முடியப்பு றெமீடியஸ் திடீர் மரணம் – ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி அஞ்சலி!

Saturday, February 11th, 2023

ஈ.பி.டி.பியின் யாழ் மாநகர சபை உறுப்பினரும் பிரபல சட்டத்தரணியுமான முடியப்பு றெமீடியஸ் விபத்தில் சிக்கி சிகிச்சை பெற்றுவந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று முற்பகல் உயிரிழந்துள்ளார்.

அன்னாரது திடீர் இழப்பு பேரதிர்ச்சியை கொடுத்துள்ளதுடன் அன்னாரது இழப்பால் பெருந்துயருற்றுள்ள குடும்பத்தினருடன் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியும் இணைந்து கொள்கின்றது.

முன்பதாக பெப்ரவரி 8 ஆம் திகதி பருத்தித்துறை வீதி சிறுப்பிட்டியில் இடம்பெற்ற வீதி விபத்தில் சிக்கி மு.றெமீடியஸ் படுகாயமடைந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

வீதியின் குறுக்கே சென்ற நாய் ஒன்றுடன் மோதியே விபத்திற்கு உள்ளான சமயம் தலைக் கவசம் கழன்றமையினால் பலத்த காயத்திற்கு இலக்காகி சிகிச்சை பெற்றுவந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்றையதினம் உயிரிழந்துள்ளார்.

விபத்தில் மூளையில் ஏற்பட்ட கடுமையான சிதைவு மற்றும் இரத்தக் கசிவுகள் மூளையின் செயற்பாடுகளை கடுமையாக பாதித்ததன் விளைவாக சத்திர சிகிச்சை மற்றும் அதிதீவிர சிகிச்சை அளித்தும் பலனளிக்கவில்லை என வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

000



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106