இன்றைய போராட்டத்துக்கு நீதிமன்றம் தடை உத்தரவு!
Saturday, February 11th, 2023
யாழ்ப்பாண நகரில் இன்று சனிக்கிழமை நடைபெறும் சுதந்திர தின விழாவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ள போராட்டத்துக்கு நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி முன்வைத்த விண்ணப்பத்துக்கு இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாண கலாசார நிலையத்தில் இன்று நடைபெறும் சுதந்திர தின விழாவில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பங்கேற்கிறார். இந்த நிகழ்வுக்கு எதிர்ப்புத் தெரிவித்து போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
இந்த நிலையில் இந்த போராட்டத்துக்கு தடை உத்தரவு கோரி யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் பொலிஸார் விண்ணப்பம் செய்தமை குறிப்பிடத்தக்கது.
0000
Related posts:
ஆட்பதிவு நடவடிக்கை தொடர்பில் நடைமுறையிலுள்ள சட்ட விதிமுறைகளை வலுப்படுத்த நடவடிக்கை - ஜனாதிபதி!
புத்தாண்டு கொண்டாட்டங்கள் தொடர்பில் இறுதி முடிவு அடுத்த வாரம் - - இராணுவத்தளபதி அறிவிப்பு!
ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடப் போவதாக பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவிப்பு!
|
|
|


