ஆட்பதிவு நடவடிக்கை தொடர்பில் நடைமுறையிலுள்ள சட்ட விதிமுறைகளை வலுப்படுத்த நடவடிக்கை – ஜனாதிபதி!
Friday, September 30th, 2016
குடிவரவு – குடியகல்வு செயற்பாடுகள் மற்றும் ஆட்பதிவு நடவடிக்கைகள் தொடர்பில் நடைமுறையிலுள்ள சட்ட விதிமுறைகளை வலுப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டுள்ளார்.
இதன் பொருட்டு புதிய சட்டங்களை உருவாக்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.
குடிவரவு – குடியகல்வு திணைக்களம் மற்றும் ஆட்பதிவுத் திணைக்களம் ஆகியவற்றை பத்தரமுல்ல பகுதியில், சுஹுருபாயவிற்கு இடமாற்றும் வைபவத்தில் நேற்று (29) கலந்துகொண்டு உரையாற்றியபோதே ஜனாதிபதி இந்த விடயத்தைக் கூறினார்.

Related posts:
நாடாளுமன்ற உறுப்பினர்களின் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்த மேலும் 11 சந்தேக நபர்கள் கைது!
காலநிலை செழுமைத் திட்டத்தை முன்னெடுக்க பிரிட்டனிடமிருந்து ஒத்துழைப்பு - ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர...
நவீன மயமாக்கல் விவசாய திட்டம் - வவுனியாவின் நான்கு பிரதேச செயலக பிரிவுக்கும் தலா 25 மில்லியன் ஒதுக்க...
|
|
|


