தபால் மூலம் வாக்களிக்க 6 இலட்சத்து 76 ஆயிரம் பேர் தகுதி – தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவிப்பு!

Friday, February 10th, 2023

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தபால்மூலம் வாக்களிக்க ஆறு இலட்சத்து 76 ஆயிரத்து 873 பேர் தகுதி பெற்றுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அதில் குருநாகல் மாவட்டத்தில் அதிகளவாக 75 ஆயிரத்து 579 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் குறைந்தளவான தபால்மூல வாக்காளர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அந்த எண்ணிக்கை மூவாயிரத்து 187 எனவும் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

தபால் மூலம் வாக்களிப்பதற்காக விண்ணப்பித்த 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரச ஊழியர்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு எதிர்வரும் 22, 23 மற்றும் 24ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106