நிதி விடயத்தை அடிப்படையாகக் கொண்டு தேர்தலை ஒத்திவைக்க முடியாது – தேர்தல் கண்காணிப்பு அமைப்புக்கள் தெரிவிப்பு!
Tuesday, February 7th, 2023
உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பான நிலைவரங்களை தெரிவிப்பதற்காக தேர்தல் கண்காணிப்பு அமைப்புக்கள் இன்று (07) காலை தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர்களை சந்தித்தன.
எந்த வகையிலும் நிதியை அடிப்படையாகக் கொண்டு தேர்தலை ஒத்திவைக்க முடியாது என்று இதன்போது அவர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதனிடையே உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கு அவசியமான ஒதுக்கத்தை கோரி நிதி அமைச்சின் செயலாளருக்கு அனுப்பப்பட்ட கடிதத்திற்கு இன்னும் பதில் கிடைக்கவில்லை என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா இதனைத் தெரிவித்துள்ளார்.
அத்துடன் நிதியமைச்சின் பதிலுக்காக தொடர்ந்தும் காத்திருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
முன்பதாக தேர்தல் வாக்களிப்புக்கான முதல் கட்ட பணிகளை ஆரம்பிப்பதற்கு அவசியமான 77 கோடி ரூபா கோரி தேர்தல்கள் ஆணைக்குழு அண்மையில் நிதியமைச்சின் செயலாளருக்கு கடிதம் அனுப்பியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106