மழையினால் ஏற்பட்ட பயிர் சேதம் தொடர்பில் கமநல சேவை நிலையத்திற்கு அறிவிக்குமாறு விவசாயிகளுக்கு அறிவுறுத்து!
Tuesday, February 7th, 2023
விவசாய அமைச்சுக்கு விவசாயிகள் வழங்கிய அறிக்கையின்படி, மழையினால் சில பிரதேசங்களில் நெற் செய்கை பாதிக்கப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.
அதனடிப்படையில் உரிய கவனம் செலுத்தி பயிர் சேத அறிக்கைகளை உரிய விவசாயிகளிடம் சேகரிக்குமாறு விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர விவசாய மற்றும் கமநல காப்புறுதி சபைக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
மழையினால் நெற் செய்கைக்கு சேதம் ஏற்பட்டு இருப்பின் அது தொடர்பில் அந்தந்த மாவட்டங்களிலுள்ள கமநல சேவை நிலையங்களுக்கு விரைவில் அறிவிக்குமாறு விவசாய மற்றும கமநல நிலையம் விவசாயிகளை அறிவுறுத்தியுள்ளது.
நெற் செய்கையின் போது பயிர் சேதம் ஏற்பட்டால் அரசின் நடவடிக்கை மூலம் காப்புறுதி நிறுவனம் இழப்பீடு வழங்குகிறது. இதற்கு அமைய ஒரு ஏக்கருக்கு 40 ஆயிரம் ரூபா மற்றும் ஒரு ஹெக்டேருக்கு 100 ஆயிரம் வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106