சுகாதார சேவை உத்தியோகத்தர்களை ஆட்சேர்ப்பு செய்வதில் அலட்சியம் – தாய் சேய் சுகாதார சேவைகள் பாதிப்பு!
Monday, February 6th, 2023
குடும்ப சுகாதார சேவை உத்தியோகத்தர்களை ஆட்சேர்ப்பு செய்வதில் அரசாங்கம் மேலும் காலதாமதம் செய்து வருவதாக குடும்ப சுகாதார சேவை உத்தியோகத்தர்களின் சங்கத்தின் தலைவர் தேவிகா கொடிதுவாக்கு தெரிவித்துள்ளார்.
குடும்ப சுகாதார சேவை உத்தியோகத்தர்களை ஆட்சேர்ப்பதற்காக அரசாங்கம் அதிகளவு பணம் செலவிட்ட போதிலும், இதுவரையில் ஆட்சேர்ப்பு மேற்கொள்ளப்படாதது வீண் விரயமாகும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
தற்போது சுமார் இரண்டாயிரம் குடும்ப சுகாதார சேவை உத்தியோகத்தர்களுக்கான பற்றாக்குறை நிலவுவதாகவும் இதன் காரணமாக தாய் சேய் நல சேவைகள் வீழ்ச்சியடையும் அபாயம் காணப்படுவதாக அரச குடும்ப சுகாதார சேவை உத்தியோகத்தர்களின் ஒன்றியம் எச்சரித்துள்ளது.
மூவாயிரம் பெண் உத்தியோகத்தர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கிய போதிலும், கடந்த வருடம்முதல் ஆயிரம் பெண் உத்தியோகத்தர்களே ஆட்சேர்ப்பு செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், அறுபது வயதைத் தொடும் ஏராளமான குடும்ப நலப் பணியாளர்களும், அறுபத்தொன்று முதல் அறுபத்து நான்கு வயதுக்குட்பட்ட குடும்ப நலச் சேவை அலுவலர்களும் கடந்த ஆண்டு டிசம்பரில் ஓய்வு பெற்றுள்ளனர். குடும்ப சுகாதார சேவை உத்தியோகத்தர்கள் ஓய்வு பெறுவதால் தாய் மற்றும் குழந்தை சுகாதார சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
இந்நிலைமையால் தாய், சேய் சுகாதார சேவைகள் வீழ்ச்சியடைவதை தடுக்கும் திட்டம் எதுவும் சுகாதார அமைச்சிடம் இல்லை எனவும் தேவிகா கொடிதுவாக்கு மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106