இலங்கையின் கிராமப்புற அபிவிருத்திக்கு இந்தியாவின் ஒத்துழைப்பு வரவேற்கத்தக்கது – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவிப்பு!

Monday, February 6th, 2023

இலங்கையின் பொருளாதார மீட்சிக்காகவும், இலங்கையின் கிராம புற அபிவிருத்திக்காகவும் இந்தியா வழங்கும் ஒத்துழைப்பு வரவேற்கத்தக்கது என குறிப்பிட்டு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அதற்காக இந்தியாவுக்கு இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகரிடம் நன்றியும் தெரிவித்துள்ளார்..

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் நேற்றையதினம் (5) 50 பேருந்துகளுக்கான ஆவணங்களை கையளித்திருந்தார்.

இலங்கையின் கிராம புறங்களின் பொது போக்குவரத்து சேவையை மேம்படுத்தும் நோக்கில் இந்திய அரசாங்கத்தினால் அண்மையில் 75 பேருந்துகள் போக்குவரத்து அமைச்சுக்கு வழங்கப்பட்டன. அவற்றில் 40 பேருந்துகள் பதிவு நடவடிக்கைகளுக்காக உட்படுத்தப்பட்டுள்ளன.

இந்திய அரசாங்கத்தினால் வழங்கப்படும் 500 பேருந்து செயற்றிட்டத்தை எதிர்வரும் மாதத்துடன் நிறைவுபடுத்த எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

இந்திய அரசாங்கத்தினால் கிடைக்கப்பெற்ற பேருந்துகளை கிராமபுற போக்குவரத்து நடவடிக்கைகளுக்கு துரிதமாக பயன்படுத்துமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க போக்குவரத்து அமைச்சருக்கு ஆலோசனை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106