யாழ்ப்பாண நிர்வாக மாவட்டத்தில் இதுவரை மூன்று தேர்தல் வன்முறை சம்பவங்கள் பதிவு – உதவி தேர்தல் ஆணையாளர் அமல்மராஜ் தெரிவிப்பு!

Friday, January 27th, 2023

யாழ்ப்பாண நிர்வாக மாவட்டத்தில் இன்றுவரை மூன்று தேர்தல் வன்முறை சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட உதவி தேர்தல் ஆணையாளர் அமல்மராஜ் தெரிவித்தார்

தேர்தலுக்கான வேட்புமனுதாக்கல் செய்யப்பட்டு தேர்தல் திகதி அறிவிக்கப்பட்டு தேர்தல் வேலைகள் இடம்பெற்று வரும் நிலையில் இன்றையதினம்வரை 3 தேர்தல் வன்முறை சம்பவங்கள் தொடர்பான முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் மேலதிக நடவடிக்கைக்கு அவை அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை

தேர்தல் செலவுகள் ஒழுங்குமுறைச் சட்டத்தின்படி, வாக்காளர் ஒருவர் சார்பாக வேட்பாளர் செலவு செய்யும் தொகையை அதிகரிக்க தேர்தல் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

வாக்காளர் ஒருவருக்கு செலவிடக்கூடிய தொகையை 15 ரூபாயாக நிர்ணயம் செய்ய தேர்தல் ஆணைக்குழு அண்மையில் தீர்மானித்திருந்தது.

எனினும், குறித்த தொகையினை தற்போது 20 ரூபாயாக அதிகரிக்க தேர்தல் ஆணைக்குழு தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106