கோப்பாய் கொலை சம்பவம் – மனைவி, மாமனார் உட்பட 11 பேர் கைது!
Friday, January 27th, 2023
யாழ்ப்பாணம் – கோப்பாய் பகுதியில் ஒருவர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் அவரின் மனைவி, மாமனார் (மனைவியின் தந்தை) உள்ளிட்ட 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கோப்பாய் மத்தி பகுதியில் உந்துருளி திருத்தகம் நடத்தி வந்த ஒரு பிள்ளையின் தந்தையான அஜித் என்பவர் கடந்த 21 ஆம் திகதி இரவு தமது பணியிடத்திலிருந்து வீடு திரும்பிக்கொண்டிருந்தபோது உந்துருளியொன்றில் வந்து வழிமறித்த குழுவொன்றினால் தாக்க முற்பட்டுள்ளது.
அதன்போது, தப்பியோடிய அவரை வீடு வரை துரத்தி சென்ற குறித்த குழுவினர், வீட்டு வாசலில் வைத்து கொடூரமாக வெட்டி படுகொலை செய்து தப்பி சென்று இருந்தனர்.
இந்த படுகொலை சம்பவம் தொடர்பில் கோப்பாய் காவல்துறையினரால் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில், கொலையுண்ட நபரின் குடும்பத்தில் முரண்பாடுகள் நிலவி வந்ததாகவும், அதனால் அவர் குடும்பத்தை விட்டு பிரிந்து தனது வாகன திருத்தகத்தில் தங்கி இருந்ததாகவும் தெரிய வந்திருந்தது.
மேலதிக விசாரணைகளில், குறித்த கொலையை செய்ய திட்டம் தீட்டியமை, கொலை மேற்கொண்டமை உள்ளிட்ட குற்றச்சாட்டில் அவரது மனைவி, மாமனார் உட்பட 11 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர. இந்த நிலையில், காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106