கண்ணீருடன் விடைபெற்றார் சானியா மிர்சா!
Friday, January 27th, 2023
கிராண்ட்சிலாம் போட்டியான அவுஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்னில் நடந்து வருகிறது.
இதில் இந்தியாவின் சானியா மிர்சா-போபண்ணா ஜோடி பிரேசிலின் லூசா ஸ்டெபானி-ரபெல் மேட்டோஸ் ஜோடியுடன் மோதியது. இதில் சானியா மிர்சா-போபண்ணா ஜோடி 6-7 (2-7), 2-6 என்ற நேர் செட் கணக்கில் தோல்வி அடைந்தது.
பிரேசில் ஜோடி சம்பியன் பட்டத்தை வென்றது. சானியா மிர்சா, அடுத்த மாதத்துடன் டென்னிசில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
அவர் தனது கடைசி கிராண்ட்சிலாம் போட்டியில் சம்பியன் பட்டம் வெல்வார் என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தோல்வி அடைந்து ஏமாற்றம் அளித்தார்.
தோல்விக்கு பிறகு சானியா மிர்சா கூறும் போது, எனது டென்னிஸ் வாழ்க்கை மெல்போர்னில் தொடங்கியது.
எனது கிராண்ட்சிலாம் வாழ்க்கையை முடிக்க இதை விட ஒரு சிறந்த அரங்கை என்னால் நினைக்க முடியவில்லை என்றார். அப்போது சானியா மிர்சா உணர்ச்சி வசத்தில் கண் கலங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106