பதவி விலகுவதாக வெளியாகும் தகவல்களில் எவ்வித உண்மையும் இல்லை – தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா அறிவிப்பு!

Thursday, January 26th, 2023

தாம் பதவி விலகுவதாக வெளியாகும் தகவல்களில் எவ்வித உண்மையும் இல்லை என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர், சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.

பரவும் வதந்திகளுக்கு பதிலளிப்பதற்காக காலத்தை விரயம் செய்வதில் பலனில்லை எனவும் அவர் தெரிவித்தார்.

உள்ளூராட்சி மன்ற தேர்தலை நடத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு முன்னெடுத்து வருவதாக அவர் தெரிவித்தார்.

ஆணைக்குழுவின் உறுப்பினர் ஒருவர் பதவி விலகுவதால் தேர்தலை நடத்துவதற்கு தடையேற்படாது.

தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் P.S.M.சார்ள்ஸ் ஆணைக்குழுவில் இருந்து விலகியதாக தகவல்கள் வெளியானபோதும் இந்த விடயம் தொடர்பில் இதுவரை தமக்கு உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படவில்லை என அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

000



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106