அதிகாரிகள் மட்டத்தில் வரி ஏய்ப்பு செய்வதை தடுக்க இலங்கை – சவுதி அரேபியா இடையே ஒப்பந்தம் !

Thursday, January 26th, 2023

வருமானத்திற்கு இரட்டை வரி விதிப்பதை தடுக்கவும், அதிகாரிகள் மட்டத்தில் வரி ஏய்ப்பு செய்வதை தடுக்கவும் இலங்கைக்கும் சவுதி அரேபியாவுக்கும் இடையே ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது.

2017 ஆம் ஆண்டின் 24 ஆம் இலக்க உள்நாட்டு இறைவரிச் சட்டத்தின் 75 (3) பிரிவின் பிரகாரம் இந்த உடன்படிக்கை பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக சட்டமா அதிபர் உறுதி செய்துள்ளதாகவும், அதேவேளை வெளிவிவகார அமைச்சு உரிய உடன்படிக்கையில் கைச்சாத்திடுவதற்கு இணங்கியுள்ளதாகவும் அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இதன்படி, இராஜதந்திர மட்டத்தில் மேற்படி உடன்படிக்கையில் கைச்சாத்திடுவதற்கு நிதி அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதியினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

2017 ஆம் ஆண்டின் 24 ஆம் இலக்க உள்நாட்டு இறைவரிச் சட்டத்தின் பிரிவு 75 (1) இன் விதிகளின்படி மேற்படி உடன்படிக்கையின் ஒப்புதலுக்காக பாராளுமன்றத்தில் முன்மொழிவை சமர்ப்பிக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

000



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106