உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான 100 க்கும் மேற்பட்ட வேட்பு மனுக்கள் நிராகரிப்பு !
Monday, January 23rd, 2023
நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக, பிரதான அரசியல் கட்சிகளால் சமர்ப்பிக்கப்பட்ட பல வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.
அதன்படி, 15 மாவட்டங்களில் கிட்டத்தட்ட 100 க்கும் மேற்பட்ட வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பதுளை – ஹல்தமுல்ல மற்றும் மஹியங்கனை பிரதேச சபைகளுக்கு ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் சமர்ப்பிக்கப்பட்ட வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதுடன், இலங்கை தொழிலாளர் காங்கிரஸினால் ஹாலிஎல பிரதேச சபைக்கு சமர்ப்பிக்கப்பட்ட வேட்பு மனுக்களும் நிராகரிக்கப்பட்டுள்ளன.
உலங்குவானூர்தி சின்னத்தில் புதிதாக அமைக்கப்பட்ட கூட்டமைப்பினால் சமர்ப்பிக்கப்பட்ட வேட்பு மனுக்களும் அனுராதபுரம், கல்னேவ மற்றும் திருகோணமலை, கந்தளாய் ஆகிய இடங்களில் நிராகரிக்கப்பட்டுள்ளன.
திருகோணமலை – சேருவில பிரதேச சபையினால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்வைத்த சமர்ப்பணங்களும் நிராகரிக்கப்பட்டுள்ளன.
நாடாளுமன்ற உறுப்பினர் றிசாத் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸினால் சமர்ப்பிக்கப்பட்ட வேட்பு மனுக்கள் கந்தளாய் பிரதேச சபையாலும், முன்னிலை சோசலிசக் கட்சியின் வேட்பு மனுக்கள் இரத்தினபுரி மாவட்டத்தின் குருவிட்ட மற்றும் கலவான பிரதேச சபைகளாலும் நிராகரிக்கப்பட்டுள்ளன.
அத்துடன், 10 அரசியல் கட்சிகள் மற்றும் மூன்று சுயேட்சைக் குழுக்களால் சமர்ப்பிக்கப்பட்ட வேட்பு மனுக்கள் உள்ளூராட்சி நிறுவனங்களால் களுத்துறை மாவட்டத்தில் நிராகரிக்கப்பட்டுள்ளன.மேலும்,காலியில் 06 வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.
000
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106