இலங்கைக்கான நிதியளிப்பு மற்றும் கடன் மறுசீரமைப்புக்கு சீனா இன்று ஆதரவை அறிவிக்கும் என்று எதிர்பார்ப்பு!
Sunday, January 22nd, 2023
இலங்கைக்கான நிதியளிப்பு மற்றும் கடன் மறுசீரமைப்புக்கான ஆதரவுக் கடிதத்தை சர்வதேச நாணய நிதியத்திடம் (IMF) சீனா இன்று ஒப்படைக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக ஹிந்துஸ்தான் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
இலங்கையின் பொருளாதார மீட்சிக்கான அதன் தொடர்ச்சியான ஆதரவின் அடையாளமாக, இலங்கையின் நிதி மற்றும் கடன் மறுசீரமைப்புக்கான ஆதரவு கடிதத்தை முதலாவதாக சர்வதேச நாணய நிதியத்திடம் இந்தியா கையளித்தது.
கடந்த 20 ஆம் திகதியன்று இலங்கையின் அரசியல் தலைமையைச் சந்திக்க வெளிவிவகார அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் கொழும்புக்கு வருகை தருவதற்கு நான்கு நாட்களுக்கு முன்னதாக, கடந்த 16 ஆம்திகதி இந்தியா தமது ஆதரவுக் கடிதத்தை சர்வதேச நாணய நிதியத்துக்கு அளித்தது.
இந்த நிலையில், இன்று சீனா தனது ஆதரவுக் கடிதத்தை சர்வதேச நாணய நிதியத்துக்கு வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட இலங்கைத் தலைவர்களுடனான தனது சந்திப்பின் போது, தேவைப்படும் நேரத்தில் இந்தியா தனது அண்டை நாடுகளுடன் நிற்கிறது என்றும், தேவை ஏற்பட்டால் கூடுதல் தூரம் செல்லத் தயாராக இருப்பதாகவும் ஜெய்சங்கர் தெளிவுபடுத்தினார்.
தனது இலங்கைப் பயணம், பிரதமர் நரேந்திர மோடியின் “அண்டை நாட்டுக்கு முன்னுரிமை“ என்ற கொள்கையின் நிரூபணம் என்று அமைச்சர் கூறினார்.
சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜீவாவுக்கு அனுப்பப்பட்ட ஆதரவுக் கடிதத்தில், இந்தியாவின் நிதியமைச்சும், இலங்கையின் ஆழமான நீடிக்க முடியாத கடன் நிலைமை, கடனளிப்பவர்களுடன் நாட்டின் ஈடுபாடு, கடனை நிலைநிறுத்துவதை இந்தியா உறுதிப்படுத்தியுள்ளது.
அத்துடன், இலங்கைக்கான உத்தேச விரிவாக்கப்பட்ட நிதி வசதிக்கான வலுவான ஆதரவை உறுதிப்படுத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
000
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106