இன்னும் சில நாட்களில் இல்ங்கையின் கடன்களின் மறுசீரமைப்புக்கு சீனா உடன்படும் என்று நம்புவதாக இலங்கை தெரிவிப்பு!
Saturday, January 21st, 2023
சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து 2.9 பில்லியன் டொலர் கடனைப் பெறும் திட்டத்துக்கு உதவும் வகையில், தமது கடன்களின் மறுசீரமைப்புக்கு சீனா உடன்படும் என்று நம்புவதாக இலங்கை தெரிவித்துள்ளது.
இலங்கையின் அதிகாரி ஒருவரை கோடிட்டு ரொய்ட்டர் செய்திச்சேவை இதனைத் தெரிவித்துள்ளது.
22 மில்லியன் மக்களைக் கொண்ட இலங்கை, கடந்த ஆண்டில் வெளிநாட்டு நாணயப் பற்றாக்குறை காரணமாக, பணவீக்கம் முதல் செங்குத்தான மந்தநிலை வரையிலான சவால்களைச் சந்தித்து வருகிறது.
சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து பிணை எடுப்பதற்கு இலங்கை பந்தயத்தில் ஈடுபட்டுள்ளது.
இந்த பந்தயத்தில் வெற்றி பெறுவதற்கு முன்னர், இறுதி உடன்பாட்டை எட்டுவதற்கு அதன் மிகப்பெரிய இருதரப்பு கடன் வழங்குனர்களான சீனா மற்றும் இந்தியா ஆகிய இரு நாடுகளின் ஆதரவை இலங்கை எதிர்பார்த்திருந்தது.
இந்தநிலையில், இந்தியா, தமது ஆதரவை தற்போது வெளியிட்டுள்ளது.
எனினும் கலந்துரையாடல்களின் இரகசியத்தன்மை காரணமாக, கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தைகளின் விபரங்களை வழங்குவது கடினமானது என்று திறைசேரியின் பிரதி செயலாளர் பிரியந்த ரத்நாயக்க செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.
சீனாவுடனான பேச்சுவார்த்தைகள் இறுதி கட்டத்தில் இருப்பதாகவும், அடுத்த சில நாட்களில் அவர்களின் உறுதிமொழியையும் தாம் எதிர்பார்ப்பதாகவும் பிரியந்த ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106