23 ஆம் திகதி வரை சந்தர்ப்பம் – தபால் வாக்களிப்பு விண்ணப்பதாரிகளுக்கு தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்து!
Thursday, January 19th, 2023
நாளை (20) முதல் எதிர்வரும் 23 ஆம் திகதி வரையில் உறுதிப்படுத்தப்பட்ட அஞ்சல் மூல வாக்களிப்புக்கான விண்ணப்பங்களை மாவட்ட தேர்தல்கள் காரியாலயத்தில் கையளிப்பதற்கு அஞ்சல் மூல உறுதிப்படுத்தல் அதிகாரிகளுக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
குறித்த தினங்கள் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வருவதால், அஞ்சல் விண்ணப்பங்களில் தாமதம் ஏற்படக்கூடும் என்பதை கருத்திற்கொண்டு குறித்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
உள்ளூராட்சிமன்ற தேர்தலுக்கான அஞ்சல் மூல வாக்களிப்புக்கான விண்ணப்பங்களை பொறுப்பேற்கும் நடவடிக்கை எதிர்வரும் 23 ஆம் திகதி நள்ளிரவுடன் நிறைவடையவுள்ளது.
அதேநேரம், தேர்தல் காலப்பகுதியில், தேர்தல் தொடர்பான முறைப்பாடுகளை தெரிவிக்க தேர்தல் ஆணைக்குழுவினால் தேசிய தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ நிலையம் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, தேர்தல் சட்டங்களை மீறுதல் தொடர்பான முறைப்பாடுகளை குறித்த மத்திய நிலையத்தின் தொலைபேசி, தொலைநகல், மின்னஞ்சல், வட்ஸ்அப், வைபர், பேஸ்புக் ஆகியவற்றின் ஊடாக தெரிவிக்க முடியும் என்றும் தெரிவிக்கப்படட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
000
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106