தேர்தல் செலவு ஒழுங்குபடுத்தல் சட்டமூலம் அரசியலமைப்புக்கு முரண் அல்ல – உயர் நீதிமன்றம்!

Wednesday, January 18th, 2023

தேர்தல் செலவு ஒழுங்குபடுத்தல் சட்டமூலம் அரசியலமைப்புக்கு முரண் இல்லை என உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றம் நேற்று செவ்வாய்க்கிழமை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன தலைமையில் கூடியது.

பிரதான நடவடிக்கையாக சபாநாயகரின் அறிவிப்பு இடம்பெற்றது. இதன்போதே சபாநாகர் உயர் நீதிமன்றம் அனுப்பியுள்ள தீர்ப்பை சபைக்கு அறிவித்துள்ளார்.

இதன்போது கருத்து வெளியிட்ட அவர், “அரசியலமைப்பின் 121-1 அரசியலமைப்புக்கு அமைய உயர் நீதிமன்றத்தில் சவாலுக்குட்படுத்தப்பட்டிருந்த தேர்தல் செலவு ஒழுங்குபடுத்தல் சட்டமூலம் தொடர்பில் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு எனக்கு கிடைக்கப்பெற்றுள்ளது என்பதை நாடாளுமன்றத்துக்கு தெரிவிக்கின்றேன்.

உயர் நீதிமன்றத்தினால் குறித்த சட்டமூலத்தின் விதிமுறைகள் தொடர்பில் விசாரணை மேற்கொண்ட பின்னர் உயர் நீதிமன்றத்தின் தீரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கும் திருத்தங்களுக்கு கீழ் சட்டமூலத்தின் விடயங்கள் எதுவும் அரசியலமைப்புக்கு முரணாக அமைவதில்லை எனவும் நாடாளுமன்றம் சாதாரண பெரும்பான்மையுடன் தேர்தல் செலவு ஒழுங்குபடுத்தல் சட்டமூலத்தை நிறைவேற்றிக்கொள்ள முடியும் எனவும் தெரிவித்துள்ளது.

அதனால் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை உத்தியோகபூர்வ அறிக்கையில் அச்சிடுமாறு உத்தரவிடுகின்றேன்.’ எனத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

000



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106