IMF அங்கீகாரம் முதல் காலாண்டில் இலங்கையினால் பெற முடியும் – இராஜாங்க அமைச்சர் நம்பிக்கை!
Tuesday, January 17th, 2023
இந்த ஆண்டின் முதல் காலாண்டில் சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) அங்கீகாரத்தை இலங்கையினால் பெற முடியுமென நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்தின் உதவி மற்றும் கடன் மறுசீரமைப்பு தொடர்பில் இலங்கை சாதகமான முடிவுகளைப் பெறத் தொடங்கியுள்ளதாக அவர் இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
நாணய நிதியத்தின் அங்கீகாரம் கிடைத்தவுடன் ஜனாதிபதி உத்தியோகபூர்வ அறிவிப்பை வெளியிடுவார் என்று அமைச்சர் கூறினார்.
நாடாளுமன்ற உறுப்பினர் பிரேமநாத் சி தொலவத்த எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்த்க்கது
000
Related posts:
சீன பாதுகாப்பு மாநாட்டில் இலங்கை பாதுகாப்பு செயலாளர்கள்!
இலங்கை இனவாதம் வளர்வதை தடுக்கவேண்டும்– மனித உரிமை அமைப்புகள் வலியுறுத்தல்!
நெடுந்தீவு வெட்டகளி குளத்தில் 6 இலட்சம் இறால் குஞ்சுகள் - அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கருத்திட்டத்...
|
|
|


